இந்தியா

குடைகளுக்கு 20 சதவீதம் வரி அதிகரிப்பு: வரவேற்பு தெரிவிக்கும் குடை உற்பத்தியாளர்கள்!

Published

on

பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் வைரத்திற்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்தும் குடைக்கு வரியை உயர்த்துவதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குடைகளுக்கு 20% வரி அதிகரிப்பு செய்ததை குடை உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் இறக்குமதி செய்யும் குடைகளுக்கு 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் குடைகளுக்கு வரி அதிகமில்லை.

சீனாவிலிருந்து மிக குறைந்த விலையில் குடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு குடை தயாரிப்பு விற்பனை குறைந்துள்ளதாகவும் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட குடைகளுக்கு வரி விதிப்பு அதிகரித்து உள்ளதால் உள்நாட்டு உடைகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் இதற்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குடை உற்பத்தி மற்றும் குடை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் குடைகள் தயாரிக்க வெளிநாட்டிலிருந்து ஒருசில மூலப் பொருள்கள் வாங்கும்போது அந்த பொருட்களுக்கும் வரி அதிகம் என்பதால் உடை உற்பத்தியாலர்களுக்கு ஒரு சிக்கலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version