ஆரோக்கியம்

உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

• இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள உலர் திராட்சையை பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படும். தோல் நோய்களிலிருந்தும ரத்தசோகை போன்ற பிரச்ளைகளிலிருந்தும் விடுபட உலர் திராட்சை உதவுகிறது.

• திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட ஏராளமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உதாரணமாக, 100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.

• வயிற்று வலி, உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் பிரச்சினைகள், மலச்சிக்கல், இரைப்பை, குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.

• உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை.

• உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.

• தினந்தோறும் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால் 3-4 மாதங்களில் மாதவிடாய் பிரச்சனை குணமாகும்.

seithichurul

Trending

Exit mobile version