உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் என்றால் விடுதலை: கைதிகளுக்கு உக்ரைன் அரசு அறிவிப்பு!

Published

on

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தயார் என்றால் விடுதலை செய்யப்படும் என கைதிகளுக்கு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

உக்ரைன் நாட்டில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் போருக்கு தயார் என்றால் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து ஏராளமானோர் தங்கள் தாய்நாட்டை காக்க ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களும் நிதி உதவியும் உலக நாடுகளிலிருந்து குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் தற்போது ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார்.

அதன்படி உக்ரைன் நாட்டில் சிறையில் உள்ள கைதிகள் போருக்கு செல்ல தயார் என்றால் அவர்களுடைய குற்றம் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமான கைதிகள் விடுதலை மற்றும் தாய் நாட்டை காப்பதற்காக ஆயுதம் ஏந்த தயாராகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version