உலகம்

ஐரோப்பிய யூனியனில் இணைந்தது உக்ரைன்: ரஷ்யாவுக்கு மேலும் சிக்கலா?

Published

on

ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த வேண்டுமென ஐநா உள்பட பல்வேறு அமைப்புகளும், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதும், உக்ரைனுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிரடியாக ஐரோப்பிய யூனியனில் இணைவதாக உக்ரைன் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் நேற்று கையெழுத்திட்டார்.

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதற்கு எந்தவித தடையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது .

ஐரோப்பிய யூனியனில் இருபத்தி எட்டு நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனும் இணைந்து உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைந்துள்ளதால் ரஷ்யாவுக்கு மேலும் பல சிக்கல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version