உலகம்

அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மாணவர்கள்: இன்று சிறப்பு விமானத்தில் வருகை!

Published

on

உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

முதல்கட்டமாக உக்ரைன் எல்லையில் உள்ள நாடுகளில் இந்திய மாணவர்களை அழைத்து வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர திட்டமிடப்பட்டது .

இந்த நிலையில் அண்டை நாடான ருமேனியா வழியாக மாணவர்கள் தாய்நாடு திரும்ப தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் சிக்கிய இந்திய மாணவர்கள் பலர் மீட்கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் ருமேனியா வழியாக சிறப்பு விமானங்கள் மீது இந்தியா திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலும் மூடப்பட்டு உள்ளதால் சுற்றியுள்ள நாடுகளின் உதவியுடன் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக இந்தியாவுக்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 470 மாணவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக ருமேனியாவில் இருப்பதாகவும் மற்ற மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version