உலகம்

மோடி போரை நிறுத்த சொன்னால் புதின் கேட்பார்: உக்ரைன் தூதரகம் கோரிக்கை

Published

on

ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்பார் என்றும் எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது இன்று காலை ரஷ்யா போர் தொடுத்தது என்பதும் உக்ரைன் மீது பயங்கரமான தாக்குதல் நடந்து கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உக்ரேன் தூதரகம் இந்திய பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா ரஷ்யாவுக்கும் அழுத்தம் தர வேண்டும் என்றும், உலக அளவில் பிரதமர் மோடிக்கு வலுவான குரல் இருப்பதால் அவர் கூறுவதை புதின் கேட்பார் என்றும் இந்தியாவின் தீவிர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்று உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தியாவோ இப்போதைக்கு நடுநிலை வகிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்திய தூதரக தரப்பிலிருந்து உக்ரைன் ரஷ்யா இடையே போர் முடிவுக்கு வந்து அமைதி ஏற்படும் என்று இந்தியா நம்புவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version