இந்தியா

நேற்று வானிலை ஆய்வு மையம், இன்று யுஜிசி: டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

Published

on

நேற்று வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று யுஜிசி பல்கலைக்கழகத்தின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய அலுவலகங்களின் இணையதளங்கள் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் குறிப்பாக அரசுக்கு சொந்தமான இணையதளங்கள், டுவிட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அரசின் முக்கிய ரகசிய தகவல்கள் கசியும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசின் டுவிட்டர் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் நேற்று திடீரென இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது யுஜிசி டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது என்றும் இதனையடுத்து அந்த ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் முக்கிய இணையதளங்கள் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விலக் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version