தமிழ்நாடு

பெரியார் பல்கலையின் படிப்புகள் செல்லாதா? யுஜிசியின் அதிர்ச்சி அறிவிப்பு

Published

on

பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த தொலைதூர படிப்புகள் செல்லாது என பல்கலைகழக மானியக்குழுவான யூஜிசி அறி வித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியாக கல்வித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர் இல்லாமல் இந்த பல்கலைக்கழகம் செயல்படுவதாகவும் அதுமட்டுமின்றி பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியை பெறாமல் தொலைதூர கல்வி திட்ட மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்களை நடத்தி வருகிறது என்றும் அந்த படிப்புகளில் சேர வேண்டாம் என்றும் யுஜிசி ஏற்கனவே அறிவித்திருந்தது.

2020 ஆம் ஆண்டு தொலைதூர படிப்புகளுக்கான அனுமதி முடிந்து விட்டதால் அதன் பிறகு பெற்ற பட்டங்கள் எதுவும் செல்லாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் வழி கல்வி திட்டம் 2020 ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த எந்த படமும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு புதுப்பிக்க விண்ணப்பம் செய்ததாகவும், ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version