இந்தியா

அதிர்ச்சி தகவல்.. நாடு முழுவதும் இத்தனை போலி பலகலைக்கழகங்களா?

Published

on

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

போலி பலகலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுஜிசி, கேரளாவில் செயிண்ட் ஜான்ஸ் பலகலைக்கழகம், புதுச்சேரி போதி அக்கேடமி உயர் கல்வி நிறுவனம், ஆந்திராவில் கிர்ஸ் நியூ டெஸ்ட்மெண்ட் டீம்ட் பலகலைக்கழகம், கர்நாடகாவிலிருந்து பாடகான்வி சர்கர் சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை தென் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளன.

அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 8 போலி பல்கலைக்கழகங்களும், டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்களும், மேற்கு வங்கம், ஒரிசாவில் தலா 2 போலி பகலைக்கழகங்களமும், மகாராஷ்டிராவில் ஒரு போலி பகலைக்கழகமும் உள்ளன.

இந்த போலி பல்கலைக்கழகங்களுக்குப் பாடங்களைத் தொகுத்து வழங்க எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version