இந்தியா

யூஜிசி – நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

Published

on

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது.

https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மே 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெட் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வின்ணப்பிக்கும் முறை:

ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் பெயர் மற்றும் மற்ற விபரங்களை பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான விவரங்களை பதிவு செய்த பின்னர் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் 1,100 ரூபாயும், பொது பிரிவுக்கு 550 ரூபாயும், மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்களுக்கு 275 ரூபாயும், செலுத்த வேண்டும்

 

 

seithichurul

Trending

Exit mobile version