சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் 3 நாட்கள் வசூல் நிலவரம் என்ன?

Published

on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை கலகத் தலைவன் திரைப்படம் வெளியானது.

கார்ப்ரேட் நிறுவனங்களில் நடைபெறும் பணி நீக்கம், பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்து இருந்த நிதி அகர்வால் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளரான ஆரவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கலையரசன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

தடம், தடையர தாக்க, மீகாமன் படங்களைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத் தலைவன் படத்திற்கு ரசிகர்களிடையில் மிகவும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் கலகத் தலைவன் படம் தமிழகத்தில் முதல் நாளில் வெள்ளிக்கிழமை 1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சனிக்கிழமை 1.04 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை 1.10 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்களில் கலகத் தலைவன் படம் 3.14 கோடி ரூபாய் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version