சினிமா செய்திகள்

உதயநிதிக்கு கேக் ஊட்டிய கீர்த்தி சுரேஷ்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

நடிகர் மற்றும் எம்எல்ஏ உதயநிதிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கேக் ஊட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இன்றுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டக் கட்ட முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இன்றைய கொண்டாட்டத்தின் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, சுரேஷ் மாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் கேக்கை எடுத்து கீர்த்தி சுரேஷுக்கு ஊட்ட அதேபோல் கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு ஊட்டினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகிய இருவரும் தனித்துவமான கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version