தமிழ்நாடு

விஜய், அஜித் பற்றிய கேள்வி- உதயநிதி சொன்ன ‘நறுக்’ பதில்

Published

on

இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நேரில் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். அவர்கள் இன்று வாக்குச் சாவடிக்கு வந்த விதம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்னதாக நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போட்டார். ஷாலினி வெள்ளை நிற மாஸ்க் அணிந்திருக்க, அஜித், சிவப்பு கறுப்பு நிறம் பொருந்திய மாஸ்க் அணிந்து ஓட்டு போட வந்திருந்தார். 

சிவப்பு மற்றும் கறுப்பு என்பது திமுகவின் கொடி நிறம். எனவே அஜித், திமுகவுக்கு தன் ஆதரவை சொல்லாமல் சொல்லி விட்டார் என்று யூகங்கள் சொல்லப்பட்டன. இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய், சிம்பிளாக சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அவர் சைக்கிளில் வந்தது பெரிய விஷயம் அல்ல. அந்த சைக்கிளின் நிறமும் சிவப்பு மற்றும் கறுப்பு. இதனால் அவரும் திமுகவுக்கு ஆதரவாகத் தான் ஓட்டு போட வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

இ்ந்த பரபரப்புகள் பற்றி திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ‘அவர்கள் அப்படி வந்தது குறித்து எனக்குத் தெரியாது. செய்திகள் மூலமே அது குறித்து கேள்விப்படுகின்றேன். விஜய் பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோ அல்லது உடற்பயிற்சிக்காகவோ சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்திருக்கலாம். இருவரும் ஏன் அப்படி வந்தார்கள் என்பது குறித்து அவர்கள் தான் விளக்க வேண்டும்’ என்று சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார். 

Trending

Exit mobile version