தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் வெற்றி: 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசம்

Published

on

தமிழகத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியின் வெற்றிகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள சிபிஐஎம் வெற்றி பெற்ற செய்தியை பார்த்த நிலையில் சற்றுமுன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளரை விட சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 16வது சுற்றின் முடிவில் பாமக வேட்பாளரை விட உதயநிதி ஸ்டாலின் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சட்டமன்றத்துக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version