தமிழ்நாடு

வெற்றி சான்றிதழை கருணாநிதி சமாதியில் சமர்ப்பணம் செய்த உதயநிதி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் திமுக தனித்து ஆட்சி அமைக்க போகிறது என்பதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவரை அடுத்து நட்சத்திர வேட்பாளராக கருதப்பட்டது உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழை சற்றுமுன் கொடுத்தார். அந்த வெற்றி சான்றிதழ் பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேராக திமுக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று அதை சமர்ப்பணம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version