தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: தீவிர அரசியலில் உதயநிதி ஸ்டாலின்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை இளைஞரணி அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து இளைஞரணி அமைப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறேன். முதல் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிக ஆர்வமாக உள்ளேன். கண்டிப்பாக அடுத்தகட்ட வேலைகள் விரைவில் தொடங்கும் என்றார்.

மேலும், தினமும் அலுவலகம் வருவதையெல்லாம் செய்தியாக்காதீர்கள், இது என்னுடைய வேலை என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Trending

Exit mobile version