தமிழ்நாடு

சசிகலா காலில் தவழ்ந்து ஆட்சியை பிடித்த எடப்பாடி பழனிசாமி: திமுக காட்டம்!

Published

on

மக்களவை தேர்தலை தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. இதில் இரண்டு கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக இந்தமுறை நடிகரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், அதிமுக கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தனது பிரச்சாரத்தின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் எனவும், மோடி வில்லன், ஓபிஎஸ், ஈபிஎஸ் அடியாட்கள், அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் காமெடியன்கள் எனவும் விமர்சித்தார். மேலும், கூவத்தூரில் எல்லோரையும் கடத்திவைத்து சசிகலா காலில் தவழ்ந்து ஆட்சியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த வாரம் வரை எடப்பாடி பழனிசாமியை டயர் நக்கி, கவுன்சிலர் ஆகவும் லாயக்கு இல்லாதவர் என்று விமர்சித்தார் அன்புமணி ராமதாஸ். திடீரென்று, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை எடப்பாடி செய்துவருகிறார் என்று அன்புமணி கூறுகிறார். எவ்வளவு கேவலமானவர்கள் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version