தமிழ்நாடு

அமைச்சர் பதவிக்கு பேராசைப்பட மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

Published

on

சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் .

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி விரைவில் அமைச்சர் ஆவார் என்றும் அவருக்கு இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவியை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து உதயநிதி செல்லுமிடமெல்லாம் அவரை வருங்கால அமைச்சர் என்று கூறி வருகின்றனர் என்படும், ஒரு சிலர் வருங்கால முதலமைச்சர் என்றும் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட உதயநிதி ’என்னை வருங்கால அமைச்சர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆசைப்படலாம், ஆனால் பேராசைப் படக் கூடாது. தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும். அதற்கான அனுபவம் உழைப்பு வரவேண்டும் என்று கூறினார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கும் நல்ல தொடர்பு உண்டு என்றும் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை சென்ற பிறகு உடனே எனக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

 

seithichurul

Trending

Exit mobile version