தமிழ்நாடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை: உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு!

Published

on

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக திமுகவை ஆட்சி அமைக்க பணியாற்ற இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் திடீர் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது பிரச்சாரத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவரை ஒரே தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் முடக்க, உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவார் என்று பாஜக காய் நகர்த்தியது. இதனால் தமிழகத்திலேயே மிகவும் சிறிய தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் கடுமையான போட்டி இருந்தால் வெற்றி பெறுவது கடினம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திடீரென வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் முக ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமர்த்தி திமுக ஆட்சி அமைக்க 234 தொகுதிகளிலும் பணியாற்ற முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version