தமிழ்நாடு

உதயநிதி அமைச்சராகிறாரா? அவரே அளித்த பதில்!

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே.
முதலமைச்சராக முகஸ்டாலின் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமைச்சர் பட்டியல் கசிந்தது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதில் உதயநிதி உள்பட 5 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுகவின் வெற்றியை தாத்தா கலைஞரின் வெற்றி என்றும் அப்பாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம் ’அமைச்சரவை பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு மே 7-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள் என மழுப்பலாக பதில் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியை உறுதி என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முதன்முதலாக எம்எல்ஏ பதவி ஏற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவும் பதவி ஏற்பு இருப்பதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவும் மிகச் சிறந்த முறையில் செயல்படுவார் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version