தமிழ்நாடு

மூத்த அரசியல் தலைவர்களிடம் ஆசி பெறும் உதயநிதி: வைரல் புகைப்படங்கள்!

Published

on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் அமைச்சராகும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்று வருகிறார். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.

அதன் பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ ஆகியோர்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் பெரிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்களையும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.

முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மூத்த அரசியல் தலைவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருவது பாசிட்டிவாக பார்க்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version