சினிமா செய்திகள்
உதயநிதியின் கைக்கு வந்தது விஜய்யின் அடுத்த படம்!
![vijay udhayanidhi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/vijay-udhayanidhi.webp)
தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் ரிலீஸ் உரிமை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி இஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பீஸ்ட் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தை இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக அஜித் நடித்த வலிமை படத்தை விட அதிகமாக அதாவது சுமார் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஏப்ரல் 14-ம் தேதியில் ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெளியாவதால் அன்றைய தினம் பீஸ்ட் படத்திற்கான திரையரங்குகளில் குறையும் என்பது பெறப்பட்டது.
News you've been waiting for! ????????
Proud to announce #RedGiantMovies will be releasing #Thalapathy @actorvijay’s #Beast in TamilNadu. #BeastFromApril13 @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @Udhaystalin @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani @Nirmalcut pic.twitter.com/qcPCfeLVOF
— Red Giant Movies (@RedGiantMovies_) March 22, 2022