தமிழ்நாடு

எய்ம்ஸ் செங்கலை தந்தையிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

Published

on

தமிழக தேர்தலுக்காக சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒருநாள் ஒரு செங்கலை எடுத்து மக்களிடம் காண்பித்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்த எய்ம்ஸ் செங்கலை தனது தந்தையும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை குறிப்பிடுவதற்காக செங்கலை எடுத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார்.

தற்போது அந்த செங்கலை அவர் தனது தந்தையிடம் ஒப்படைத்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்ற அர்த்தத்தில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மகன் உள்பட திமுக தலைவரின் குடும்பத்தினர் உள்ள குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version