தமிழ்நாடு

3 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகிறதா? புதிய அமைச்சர்கள் யார் யார்?

Published

on

திமுக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் உதயநிதி உள்பட 3 இளைஞர்களுக்கு பதவி கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி அமைச்சராவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் சேர்ந்து மேலும் 2 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

அதேபோல் தென்மாவட்ட சீனியர் அமைச்சர் ஒருவரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அவரது பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், அதேபோல வட மாவட்ட அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் திமுகவின் சீனியர் தலைவர் ஒருவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

மொத்தத்தில் இன்னும் ஓரிரு நாளில் முதல்வர் ஸ்டாலின் புதிய அமைச்சரவை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version