தமிழ்நாடு

‘தைரியமிருந்தா ஏன் வூட்டுக்கு ரெய்டு விடு!’- அட்ரஸ் சொல்லி மோடிக்கு சவால்விட்ட உதயநிதி

Published

on

இன்று காலையிலிருந்து திமுக தரப்பைச் சேர்ந்த பலரது வீடுகளுக்கு வருமான வரித் துறை ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலினின் தங்கையுமான செந்தாமரையின் சென்னை வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வருமான வரித் துறை ரெய்டுக்கு திமுகவினரும் எதிர்க்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தரப்பு, திமுக தரப்பை மிரட்டிப் பார்ப்பதற்கு இந்த ஐடி ரெய்டு நடத்தப் படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரும், 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ‘இன்று காலையில் இருந்து திமுகவுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் மத்திய அரசு ரெய்டு நடத்தி வருகிறது.

நான் என் முகவரியைச் சொல்கிறேன். என் வீட்டுக்கு ரெய்டு நடத்த வேண்டும் என்று பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். அப்போது காட்டுகிறேன் நான் யார் என்று’ என தன் சென்னை வீட்டின் முழு முகவரியையும் சொல்லி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு சவால் விட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version