தமிழ்நாடு

இதுதான் என் அட்ரஸ், முடிஞ்சா ரெய்டு செய்: உதயநிதி சவால்

Published

on

இதுதான் என் அட்ரஸ் முடிந்தால் ரெய்டு செய் என வருமான வரித்துறையினர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிக் கட்ட பிரச்சாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென வருமான வரித்துறையினர் தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, திமுக வேட்பாளர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. அதே போல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தனது சகோதரி வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதயநிதி சவால் விடுத்துள்ளார். எனது சகோதரி வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறையினர் தனது வீட்டில் முடிந்தால் சோதனை செய்து பார்க்கட்டும், இதுதான் என் அட்ரஸ் என்று அவர் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் சவாலை ஏற்று வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version