தமிழ்நாடு

மக்களுக்காக உழைக்க காத்திருக்கேங்க- சொல்கிறார் திமுக வேட்பாளர் உதயநிதி

Published

on

திமுக தரப்பில் இந்த முறை அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இந்த முறை இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் கஸ்ஸாலி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதால், அவர் மீது எதிர்பார்க்கு அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைமையிடம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். ஆனாலும் திமுக தரப்பு, ‘உதயநிதி, தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் செல்ல உள்ளதால், தேர்தலில் போட்டியிடுவது சிரமம் தான்’ என்று சொல்லப்பட்டது. அப்படி இருந்தும் தற்போது தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி, ‘2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிற வாய்ப்பை வழங்கிய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தலைமைக்கழகத்துக்கும் நன்றி. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன். ஆதரவு தாருங்கள். அன்பும் நன்றியும்’ எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version