இந்தியா

பாரம்பரிய கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்… சூளுரைக்கும் உத்தவ் தாக்கரே!

Published

on

கர்நாடகாவில் மராட்டி பேசும் மக்கள்  நிறைந்து காணப்படும் பாரம்பரிய பகுதிகளை விரைவில் மஹாராஷ்டிராவுடன் இணைப்போம் என மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா- கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மராட்டி மொழி பேசும் மக்கள் அதிக ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். பாரம்பரியம் மிகுந்த இப்பகுதியை மஹாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக மராட்டி சங்க அமைப்புகள் பல போராடி வருகின்றனர். கர்நாடகா- மஹாராஷ்டிரா இடையே இந்த விவகாரம் பெரும் மொழி எல்லைக் கலவரத்தையே ஏற்படுத்தி உள்ளதாம்.

இது போன்று மொழி சார்ந்த எல்லை கலவரத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜனவரி 17-ம் தேதி தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “மஹாராஷ்டிரா எல்லைக்கு அருகில் உள்ள பாரம்பரிய கர்நாடகா பகுதிகளை எங்கள் மாநிலத்துடன் இணைக்கும் வரையில் ஓயமாட்டோம். மாநில எல்லைப் பிரச்னையில் உயிர்த் தியாகம் செய்த அத்தனை தியாகிகளுக்குமான நன்றிக்கடனாக இந்தக் காரியத்தை நிச்சயம் செய்து முடிப்பேன்” என சூளுரை எடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version