இந்தியா

சிவசேனா கட்சியை இழந்த உத்தவ் தாக்ரே.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published

on

சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என உத்தவ் தாக்ரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் இடையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றும் வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு உத்தவ் தாக்ரே அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா கட்சியில் சென்ற ஆண்டு ஏற்பட்ட பிளவை அடுத்து பாஜக ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் உத்தவ் தாக்ரேவை முதலமைச்சர் இருக்கையிலிருந்து இறக்கி, மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே 2022 ஜூன் 30-ம் தேதி பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் தனது தலைமையிலான சிவசேனாவினருக்கே கட்சி சொந்தம் என ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே இடையில் பிரச்சனை எழுந்தது.

Uddhav Thackeray lost Shiv Sena: Election Commission of India announcement!

யாருக்கு சிவசேனா கட்சி சொந்தம் என உச்ச நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடரப்பட்டு வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அந்த வழக்கின் தீர்ப்பிற்கு முன்பாகவே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினருக்கே கட்சி சொந்தம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் சிவசேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி வரும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பே தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது நான் ஏற்கனவே கூறி வந்துள்ளேன். எம்எல்ஏ-க்கள், எம்பி அடிப்படையில் கட்சி உரிமை எடுக்கப்படும் என்றால் ஒரு தொழிலதிபர் அவர்களை வாங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியும்.

ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம். உச்ச நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை ஏற்று 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் என நம்பிக்கை உள்ளது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சிவ சேனா கட்சி உத்தவ் தாக்கரேவின் அப்பா பால் கேஷவ் தாக்ரேவால் 1996-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. பால் கேஷவ் தாக்ரே இறந்த பிறகு சிவ சேனா கட்சியின் தலைவராக உத்தவ் தாக்ரே இருந்து வந்தார். சென்ற ஆண்டு சிவ சேனா கட்சியில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக உதவியில் ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version