உலகம்

அடுத்த டெலிவரிக்காக காத்திருந்த உபேர் டிரைவருக்கு கிடைத்த ரூ.18.61 லட்சம்!

Published

on

உபேர் நிறுவனத்தில் பணி செய்யும் டிரைவர் ஒருவர் டெலிவரி முடித்துவிட்டு அடுத்த டெலிவரிக்காக காத்திருந்த போது அவருக்கு ரூபாய் 18.6 லட்சம் அதிர்ஷ்டமாக பரிசு கிடைத்த தகவல் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த உபேர் நிறுவனத்தின் டெலிவரி செய்யும் ஊழியராக பணி புரியும் பெண் ஒருவருக்கு திடீரென 18.6 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. அவர் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் உணவு டெலிவரி செய்யும் நிலையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக உணவு நிறுவனத்தில் தன்னுடைய காரில் காத்திருந்தார்.

அப்போது அவர் தனது போன் செயலி மூலம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டுக்கு அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 18.6 லட்சம் கிடைத்துள்ள தகவல் அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 47 வயதான அந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சரியான நேரத்தில் உணவு தயாராகாததால் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் அவர் போன் மூலம் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அதிர்ஷ்டம் அவரைத்தேடி வந்துள்ளதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இனிமேல் உபேர் நிறுவனத்தில் தான் வேலை பார்க்க போவதில்லை என்றும் தானே சொந்தமாக நிறுவனம் தொடங்கி பலருக்கு வேலை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version