உலகம்

உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டிலில் இந்தியாவின் நிலை என்ன?

Published

on

2022-ம் ஆண்டு உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.

உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 94வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளது.

24வது இடத்தில் உள்ள ஜப்பான் பாஸ்போர்ட் பயன்படுத்தி 171 நாடுகளுக்கு எளிமையாகச் செல்ல முடியும். முதலிடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம் பாஸ்போர்ட் பயன்படுத்தி 180 நாடுகளுக்கு எளிமையாக விசா பெற்றுச் சென்று வர முடியும்.

உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டிலில் 2018-ம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம் 2020-ம் ஆண்டு 14வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது. 2022-ம் ஆண்டு தங்களது குடியுரிமை சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை ஐக்கிய அரபு அமீரகம் செய்ததை அடுத்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியல் 139 ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் அடிப்படையாகக் கொண்டது. இந்த தகவல்கள் அரசுகள் வழங்கும் அதிகாரப்பூர்வ தகவல் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை மொபிளிட்டி ஸ்கோர், விசா ஃப்ரீ சேவை, விசா ஆன் அரைவல், eTA மற்றும் இ-விசா(3 நாட்களில் விசா) போன்றவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version