சினிமா

2.0 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்; நவம்பர் 29ல் ரிலீஸ் உறுதி!

Published

on

லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து 2.0 படத்தை உருவாக்கியுள்ளது. படத்தின் சிஜி பணிகளுக்காக அதிக நேரம் செலவானதால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட 2.0 திரைப்படம் இந்த தீபாவளிக்கும் வெளியாக முடியாமல் காலதாமதமானது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் சிஜி கலைஞர்களிடம் சீக்கிரமாக படத்தை முடித்து தரவேண்டும் என மிகுந்த அழுத்தங்கள் கொடுத்து படத்தை ஒருவழியாக இம்மாதம் வெளியிட ரெடி செய்து விட்டார்.

தற்போது படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், திட்டமிட்டபடி 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Trending

Exit mobile version