இந்தியா

பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை!

Published

on

பெங்களூரு – மைசூரு இடையில் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள எக்ஸ்பிரவேயில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரவே 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கான பிரத்தியேகமான சாலை.

பைக்குகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் தாற்காலிகமாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான சர்வீசஸ் சாலை அமைக்கப்பட்ட உடன் எக்ஸ்பிரஸ்வேவை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பயணிகள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் பிரதாப் சிம்ஹா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு எழுதிய கடிதத்தில் பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வேக்கு காவேரி எக்ஸ்பிரஸ்வே என பெயரிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சாலைக்கு மைசூர் மன்னர் நல்வாடி கிருஷ்ணராஜ் வாடியார் பெயரை இடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

சென்ற வியாழக்கிழமை இந்த சாலையைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி, இந்த 117 கிலோ மோட்டர் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையைக் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் தொடங்கி வைப்பார்கள் என தெரிவித்தார்.

பெங்களூரு – மைசூரு இடையில் அமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையால் 150 நிமிட பயணமானது 90 நிமிடங்களாகக் குறையும் என கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version