இந்தியா

ஒரே மேடையில் சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Published

on

மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த அதுலே என்பவர் மும்பையில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ரிங்கி, பிங்கி சகோதரர்களின் தாயார் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் சிகிச்சைக்கு அதுலே உதவி செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அதுலே மீது சகோதரிகள் இருவருக்கும் ஒரு நல்ல எண்ணம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நன்றாக படித்து ஐடி துறையில் என்ஜினீயர்களாக இருக்கும் ரிங்கி, பிங்கி சகோதரிகள் இருவரும் அதுலேவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடைசிவரை ஒரே வீட்டில் சகோதரிகள் இருவரும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து அதுலே பெற்றோரிடம் இரண்டு சகோதரிகளும் கூறிய நிலையில் அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து சமீபத்தில் ஒரே மேடையில் அதுலே, ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்டபூர்வமானதுதானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதுலே மீது என்ன நடவடிக்கை காவல்துறையினர் எடுக்க இருக்கின்றன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version