இந்தியா

பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலையில் சேர்ந்த இரண்டே நாளில் சென்னை இளம்பெண் பலி!

Published

on

பெங்களூரை சேர்ந்த ஐடி கம்பெனியில் சென்னை இளம் பெண் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள் என்பதும் அதற்கு முன்னர் பெங்களூரில் அனுபவத்திற்காக சில வருடங்கள் வேலை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டியை போல பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் அவர்களது வாழ்க்கையும் ஆடம்பரமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கனவுகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருத்திகா என்ற இளம்பெண் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள எம்என்சி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்., கை நிறைய சம்பளம், நல்ல நண்பர்கள் என வாழ்க்கை ஜாலியாக சென்று கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் கிருத்திகா, தனது நண்பர் ப்ரீத்தம் என்பவரிடம் பெங்களூர் நகரை சுற்றிக்காட்டும்படி கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட ப்ரீதம் என்ற நண்பர் அவரை பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் நின்றபடியே பெங்களூரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். இருவரும் மாறி மாறி செல்பி உள்பட புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி மோதியதால் மேம்பாலத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் கிருத்திகா மற்றும் ப்ரீத்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது விபத்தை ஏற்படுத்தியவர் கல்லூரி மாணவர் என்றும் அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் கனவுகளுடன் பெங்களூர் சென்ற இளம்பெண் கிருத்திகா, இரண்டே நாளில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version