தமிழ்நாடு

திமுக கூட்டணியில் தலா ஒரு தொகுதியை பெற்ற 2 கட்சிகள்!

Published

on

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டன என்பது தெரிந்ததே. காங்கிரஸ் 25 தொகுதிகளில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 தொகுதிகளில், முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளில், மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை பெற்றுள்ள தகவல் வெளிவந்துள்ளது. திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து முக ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் வேல்முருகன் இந்த ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புதல் பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த கட்சியின் வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கருதப்படுகிறது.

 

 

Trending

Exit mobile version