தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இணைந்த மேலும் இரண்டு கட்சிகள்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணிகள் முற்றிலுமாக முடிந்து விட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு சிறிய கட்சிகள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மூன்று தொகுதிகளை கேட்ட நிலையில் அந்த கட்சிக்கு பெரம்பூர் தொகுதி மட்டும் ஒதுக்கி இருப்பதாக பெருந்தலைவர் மக்கள் தலைவர் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

இதேபோல் தமிழக முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இன்னொரு பக்கம் தமிழ் மாநில காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version