இந்தியா

இந்தியாவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான்: மொத்த பாதிப்பு 34ஆக உயர்வு!

Published

on

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதும் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் படிப்படியாக பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு வந்த ஒருவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாகவும் அதேபோல் சண்டிகர் மாநிலத்திற்கு இத்தாலியில் இருந்து வந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இந்த இருவரை அழைத்து இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு உறுதிபட கூறியிருந்த போதிலும் இந்தியாவில் படிப்படியாகத்தான் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version