உலகம்

ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டபடி நடக்குமா?

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளன என்பதும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோக்கியோவுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் இருந்து நேற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் டோக்கியோவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோக்கியோவுக்கு வரும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நோக்கியா நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள கிராமத்தில் திடீரென ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு அதே பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலுமிருந்தும் வீரர்களுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending

Exit mobile version