இந்தியா
இவர் எந்த பரம்பரைன்னு தெரியலயே! – வைரலாகும் குடிமகனின் நாக் அவுட் சண்டை வீடியோ
![Boxing 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Boxing-1.jpg)
மிதமிஞ்சிய மதுபோதையில் மதுப்பிரியர்கள் நடுரோட்டில் தள்ளாடிபடி நடப்பது, வாகனங்களின் மீது மோதுவது போல் செல்வது, சைக்கிளில் இருந்து கீழே விழுவது, நடனம் ஆடுவது, நண்பர்கள் இருவர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வது, தள்ளாடி சாக்கடையில் போய் விழுவது போன்ற அலப்பறைகளை செய்யும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சிரிக்க வைப்பதுண்டு.
இந்நிலையில், இதுபோல மற்றொரு வீடியோ வெளியாகி சிரிக்க வைத்துள்ளது. மதுபோதையில் இருவர் நிற்கின்றனர். அதில் ஒருவர் மற்றவரை தாக்க முயல்கிறார். பொறுமையாக நிற்கும் ஒருவர் ஒரு கட்டத்தில் குத்துச்சண்டையில் வீரர் தயாராவது போல் கைகளை ஒரேசேர வைத்து எதிரே இருப்பவர் மீது ஒரு நாக் அவுட் விடுகிறார். அந்த நபர் கீழே சரிந்து விழுகிறார்.
சமீபத்தில்தான் ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ‘இவர் எந்த பரம்பரைன்னு தெரியலயே’ என பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ‘இவர் சார்பட்டா பரம்பரை இல்லை.. சரக்கடிச்ச பரம்பரை’ என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
ஆஹா… இவன் எந்த பரம்பரை னு தெரியலையே… ???????????????? pic.twitter.com/o1h8useYbJ
— புதுவை_புதல்வன்_ (@pondy_partner_) August 5, 2021