தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்: டெல்லியில் ஆஜரான தினகரன்!

Published

on

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதையடுத்து அதே வருடம் ஏப்ரல் 25-ஆம் தேதி டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில் தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தினகரன் மனு தாக்கல் செய்தார். கடந்த நவம்பர் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தினகரனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தொடர்ந்து நடத்தவும், டிசம்பர் 4-ஆம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான தினகரன் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் வழக்கு டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version