சினிமா செய்திகள்

 இரண்டு படங்களில் நடிக்கும் ரியோ!

Published

on

சரவணன் மீனாட்சி சீரியலில் கடைசி சரவணனாக நடித்த புகழுக்குரிய ரியோ, தற்போது சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்‌ஷிப் டீம் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் ரியோ, தற்போது ஒரு குறும்படத்திலும் கமீட் ஆகியுள்ளார்.

காதல் ஒன்று கண்டேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த குறும்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நக்‌ஷத்ரா நடிக்கவுள்ளார்.

இந்த குறும்படத்தை புனித் எனும் இயக்குநர் இயக்குகிறார். நாகேஷ், அஸ்வின் குமார் போன்ற நடிகர்கள் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version