இந்தியா

திருப்பதியில் தரிசனம்: 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என அறிவிப்பு!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் திருப்பதி கோவிலில் முதல் கட்டமாக 300 ரூபாய் தரிசன அனுமதிக்கப்பட்டது என்பதும், அதன் பின்னர் இலவச தரிசனம் அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து மாநில மக்களும் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்றும் தினந்தோறும் 8000 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பக்தர்கள் முண்டியடித்து வருவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதன்படி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்றால் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் அல்லது தரிசனத்திற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பித்து தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version