தமிழ்நாடு

புறநகர் ரயிலில் பயணம் செய்ய 2 டோஸ் கட்டாயம்: மேலும் சில நிபந்தனைகள்!

Published

on

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் குறிப்பாக புறநகர்ப் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் வழக்கம்போல் புறநகர் போக்குவரத்து இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50% புறநகர் ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய மாதாந்திர பயண அட்டை எடுக்கப்படும் போதும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுமென்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version