தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை: இன்றே சென்னையில் கொட்டுகிறது மழை!

Published

on

தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று சென்னையில் தற்போது மழை கொண்டிருப்பது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் முழுவதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது என்பதும் இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து மழை படிப்படியாக மழை குறைந்து பனி அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.

அந்த வகையில் தற்போது நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்து ஒரு சில நிமிடங்களில் தற்போது சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version