தமிழ்நாடு

இந்த வாரம் 5 நாட்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை: பக்தர்கள் அதிர்ச்சி

Published

on

ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு நாட்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் என்பதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் இராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அக்டோபர் 6ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் அதிக கூட்டம் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து செவ்வாய், புதன், மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் இந்த வாரத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராமேஸ்வரத்தை பொறுத்தவரை கோவில்களில் பக்தர்கள் மற்ற நாட்களில் அனுமதிக்கப்பட்டாலும் புனித தீர்த்தங்களில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு கோவிலுக்கு வரும் பக்தர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாஸ்மாக், மால்கள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version