இந்தியா

டிக்டாக் போல் டுவிட்டருக்கும் தடை வரும்: டுவிட்டரிலேயே டுவிட் போட்ட நடிகை

Published

on

டிக்டாக் தடை செய்யப்பட்டது போல் டுவிட்டருக்கும் ஒருநாள் தடை நிச்சயம் வரும் என நடிகை ஒருவர் டுவிட்டரிலேயே டுவிட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்த ரிஹானாவுக்கு தனது கடுமையான கண்டனத்தை எழுப்பியிருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

அவர் தனது டுவிட்டில், ‘அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என ரிஹானாவை கடுமையாக விமர்ச்னாம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை கங்கனா பதிவு செய்திருந்த ஒருசில டுவிட்டுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. கங்கனா ரனாவத் விதிகளை மீறியுள்ளதாகவும், அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தன்னுடைய டுவிட்டுக்களை நீக்கியது குறித்து கங்கனா கூறியபோது, சீனாவின் கைப்பாவையாக டுவிட்டர் செயல்பட்டு வருவதாகவும் டுவிட்டர் எனது டுவிட்டுகளை நீக்குவதாக மிரட்டுகிறது என்றும் நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்படுவது போலவே ட்விட்டரும் ஒரு நாள் தடை செய்யப்படும் என்று அவர் பதிவு செய்துள்ளார். டுவிட்டர் இணையதளம் தடை செய்யப்படும் என டுவிட்டரிலேயே நடிகை கங்கனா டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version