உலகம்

ஜோ பைடன் பதவியேற்கும் போது பெரும் வன்முறை வெடிக்கலாம் என புலனாய்வுத்துறை எச்சரிக்கை! 70 ஆயிரம் பேரின் டுவிட்டர் முடக்கம்!!

Published

on

அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் நிலையில், ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடிக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மூலம் வன்முறையைத் தூண்டி வருகிறார்.  இந்த நிலையில், ஜோ பைடன் அதிபர் பதவியேற்கும் போது, நாடாளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் ஏந்திய போராட்டம் வெடிக்கலாம் என்றும் FBI எனப்படும் அந்நாட்டு புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து FBI தரப்பில் வெளியான இதழில் வந்துள்ள தகவலின்படி, வரும் 16 முதல் 20-ஆம் தேதி வரை மாகாணப் பேரவைகளிலும், 17 முதல் 20-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்திலும் சிலர் ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மூலம்  வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பிறகு டிரம்பின் ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version