வணிகம்

டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி!

Published

on

டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

சர்வர் பராமரித்தல் போன்ற தேவையான பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க முடியாது.

கடந்த சில மாதங்களாக ஊழியர்கள், தங்களால் வீட்டிலிருந்தும், எங்கிருந்தும் பணிபுரிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அலுவலகம் வர விரும்பினால், திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். ஆனால் அலுவலகம் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது. அலுவலகத்தை மிண்டும் திறந்தாலும் முன்பு இருந்தது போன்று இருக்காது. மிகவும் கவனமாகவும், ஒவோரு அலுவலகமும் படிப்படியாகத் திறக்கப்படும்.

மேலும் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு வணிக ரீதியான பயணங்களும் ஊழியர்களுக்கு இருக்காது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version