உலகம்

டுவிட்டரில் இனி லிங்க் இணைக்க முடியாது..எந்தெந்த லிங்க் என பட்டியலிட்ட எலான் மஸ்க்!

Published

on

டுவிட்டரில் இனிமேல் மற்ற சமூக வலைதளங்களின் லிங்குகளை இணைக்க முடியாது என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டுவிட்டர் பயணிகள் பலர் தாங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைத்துள்ள கணக்குகளின் லிங்கையும் பதிவு செய்து வைத்திருப்பார்கள் என்பதும், அதன் மூலம் அந்த நபரின் மற்ற சமூக வலைதளங்களுக்கும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டர் மூலம் ஒரு சில சமூக வலை தளங்கள் இலவசமாக விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் வகையில் டுவிட்டரில் இனி மற்ற சமூக வலைதளங்களில் இணைப்புகளை பதிவு செய்ய முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மில்லியன் கணக்கான டிவிட்டர் பயனாளிகள் தங்களுடைய மற்ற சமூக வலைதளங்களில் லிங்குகளை உடனடியாக அகற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களில் லிங்கங்களையும் தடை செய்யவில்லை என்றும் யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக், ரெடிட், ஸ்னாப்சேட் ஆகிய சமூக வலைதளங்களின் இணைப்புகள் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுவிட்டரில் இனிமேல் லிங்குகளை இணைக்க முடியாது என்று கூறப்பட்ட சமூகவலைதளங்கள் பின்வருமாறு:

Facebook
Instagram
Mastodon
Truth Social
Tribel
Nostr
Post

 

seithichurul

Trending

Exit mobile version